“அடடா! இதுவும் ஆரோக்கியமா?” என ஆச்சரியப்பட வேண்டாம்.”வாயுவை (fart) வெளியே விடுவது ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்” என மருத்துவர்கள் சொல்கிறார்கள்!
ஆமாம் இது வெறும் சிரிப்புக்குரிய விடயம் அல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆதாரம் உண்டு!
உணவு செரிக்கும்போது உருவாகும் வாயு உடலில் அடைபட்டு இருந்தால், வயிற்று வலி, வாந்தி போன்ற பிரச்சனைகள் வரும்.அதை வெளியே விடுவது உடலை இலகு வாக்குவதோடு செரிமானத்தையும் மேம்படுத்தும்.வாயுவில் உள்ள Hydrogen Sulfide (H₂S) என்ற வேதிப்பொருள், இரத்தக் குழாய்களை தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்!
சிறிதளவு H₂S உடல் உற்பத்தி செய்வது, இருதய நலனையும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.(Nature, Harvard Health, Times of India போன்ற ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன)
வாயுவை அடக்கிக் கொள்வது, கோலன் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்தி, எரிச்சல், கட்டி (hemorrhoids) போன்ற பிரச்சனைகளை வரவழைக்கும்.
அதை இயற்கையாக வெளியே விடுவது குடல் சுகாதாரத்தை பாதுகாக்கும்.வாயுவை அடக்கினால் உடல் நெருக்கம், மன அழுத்தம் ஏற்படும்.
ஆனால், வெளியே விடும்போது உடல் சீராக சுவாசிக்க உதவுகிறது. எனவே, மனம் நிம்மதி பெறும்.சிறந்த செரிமானம் கொண்டவர், சரியான அளவு வாயு வெளியே விடுவார்.அது உடல் சமநிலையை காட்டும் அறிகுறிதான்.
அறிவியல் ரீதியாக பார்க்கின்றபோது,குடல் பகுதியில் உள்ள நன்மை பயக்கும் பக்டீரியாக்கள், உணவிலுள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை செரிக்கும் போது, H₂S உருவாகிறது.அது நம் இரத்தக் குழாய்களை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, இருதயத்தை பாதுகாக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

