செய்தி

இரகசிய தகவலால் வசமாக சிக்கிய பொலிஸ் அதிகாரி

முல்லைத்தீவு மாங்குளம் கொக்காவில் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ படைப்பிரிவின் கீழ் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக ஏ -9 வீதியின் கொக்காவில் பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டபோது, குறித்த பொலிஸ் அதிகாரி தனது உடைமையில் 92 கிராம் 400 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒட்டுசுட்டான் காவல்துறை நிலையத்தில் போக்குவரத்து பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய குறித்த பொலிஸ் அதிகாரி, கையூட்டல் பெறல் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில்,வெலிஓயா பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே அவர்  ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.