விளையாட்டு

ஸ்பெயினில், கார் பந்தயத்துக்கு தயாரான அஜித்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார்.

இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார்

கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த கார் பந்தய நிறுவனம் துபாய்,பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

அஜித்குமார் அடுத்ததாக ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

அந்த போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 27–28 – க்ரெவென்டிக் 24H, செப்டம்பர் 30– அக்டோபர் 1 –LMP3 சோதனை, அக்டோபர் 6– மஹிந்திரா பார்முலா E சோதனை, அக்டோபர் 11–12– GT4 ஐரோப்பிய தொடர், என நான்கு கார் ரேஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்க உள்ளார்.

அதனை தொடர்ந்து ஆசிய கார் ரேஸ் தொடரில் பங்கேற்க உள்ளதாக அஜித்குமார் ரேஸிங் அணி அறிவித்துள்ளது.

அதாவது, அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லெமன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ