செய்தி

வரலாற்றை மாற்றிய ஜனாதிபதி அனுர குமார!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் திறப்பு நினைவு பலகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் பொறிக்கப்படவில்லை. அதற்கு மாறாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளதென பொறிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் அமைக்கப்படும் சர்வதேசதர கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று கலந்து கொண்டிருந்தார்.

இந்த மைதானத்துக்கான திறப்பு நினைவுபலகையில் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படாமை பலரின் அவதானத்தை பெற்றுள்ளது. இது எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான அரசியல் எடுத்துகாட்டாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதி அனுரவின் இந்த நடவடிக்கை இலங்கை அரசியலின் ஒரு புதிய அணுகுமுறையை பிரதிபலிக்கின்றது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.