செய்தி

முல்லைத்தீவில் குளவி தாக்கி ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு – விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மற்றும் விசுவமடு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்கள் மீது குளவி தாக்கிய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

12ஆம் கட்டை தபால் நிலைய வீதி பகுதியில் இராணுவத்தினரால் தோட்டம் செய்யப்படும் காணியிலுள்ள மா மரத்தில் இருந்த குளவிகள் கலைந்து கொட்டியதால் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். 

இவ்வாறு காயமடைந்த மாணவர்கள் உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குளவி தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் நலன் தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.