செய்தி

பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதிக வேகத்துடன் வந்த தனியார் பேருந்து இரண்டு பேருந்துகளை முந்தி செல்ல முற்பட்டவேளை சமிஞ்சையை செலுத்தி எதிர்பக்கத்திற்கு செல்வதற்காக காத்திருந்த முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.