செய்தி

புலமைப்பரீட்சை மேன் முறையீட்டு விண்ணப்பம்

2025 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேன்முறையீடுகளை நாளை முதல் முன்வைக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (9) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் ஒன்லைன் ஊடாக விடைத்தாள் மதீப்பீடு தொடர்பான மேன்முறையீட்டை முன்வைக்க முடியும்.

இதனை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்தி பயிலும் பாடசாலையின் அதிபரினால், பாடசாலைக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி https://onlineexams.gov.lk/eic/index.php/clogin/ என்ற இணையத்தளத்தில் SCHOOL LOGIN இல் உள்நுழைந்து மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.