செய்தி

நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அமெரிக்காவில் அமைந்துள்ளது. இதனை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ளன.

விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நாசா நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கிடையே செவ்வாய் கிரகம், நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் ரஷியாவுடன் இணைந்து போட்டி போடுகிறது.

எனவே இந்த திட்டம் தொடர்பான ரகசியங்கள் தெரிந்துவிடாமல் இருப்பதற்காக நாசாவில் பணிபுரிய சீனர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க விசா வைத்திருந்தாலும் சீனராக இருந்தால் அவர்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

அதேசமயம் ஆராய்ச்சி மாணவராக அவர்கள் தொடரலாம் என நாசா தெரிவித்துள்ளது. இது நாசாவில் பணிபுரிவதற்கான தங்களது உரிமையை பறிக்கும் செயல் என சீனா குற்றம்சாட்டி உள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.