செய்தி

ஜனாதிபதி ஜப்பான் மற்றும் அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் பல்வேறு நாடுகளின் அரசு தலைவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

அமெரிக்கா விஜயத்தை முடித்துக் கொண்டதும் ஜனாதிபதி அநுர, ஜப்பானுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி விஜயம் செய்ய உள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர இந்த விஷயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 27ஆம் திகதி ஜப்பானில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஜப்பானின் பல்வேறு முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.