செய்தி

”கிருஷாந்தியின் அடிபாரே” நூல் வெளியீடு

செம்மணி புதைகுழியை உலகறியச்செய்த கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையை மையமாக வைத்து சிங்களத்தில் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

”கிருஷாந்தியின் அடிச்சுவடுகளில்” (கிருஷாந்தியின் அடிபாரே) என்று குறித்த நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

சிங்களத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரத்னபால கமகே இதனை தொகுத்து எழுதியுள்ளார்.

செம்மணிப் படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்த புலனாய்வு ஊடகத் தகவல்கள் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.  

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.