செய்தி

களவாடப்பட்டுள்ள பொலிஸாரின் வாகனம்

119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க அதிகாரிகள் பயணித்த திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின்  கண்காணிப்பு ஜீப்  திருடப்பட்டுள்ளது.

ஜீப்பைத் தேட விரிவான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, 119 க்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க நான்கு பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று சென்றுள்ளனர்.

 இதனையடுத்து ஜீப்பின் இயந்திரம் இயங்கிக் கொண்டிருந்தபோது, அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றுள்ளனர்.

அந்த நேரத்திலேயே, குறித்த ஜீப் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.