செய்தி

எல்ல பேருந்து விபத்து; இராணுவவீரர் கௌரவிப்பு

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் மீட்புப் பணிக்கு வந்த இராணுவ விசேடப் படை வீரரை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று வெல்லவாயில் நடைபெற்றது.

விபத்து நடந்த நேரத்தில், கவிழ்ந்த பேருந்தில் முதலில் ஏறி காயமடைந்தவர்களை மீட்டவர் இராணுவ விசேட அதிரடிப் படையின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டார ஆவார்.

இந்தப் பாராட்டு நிகழ்ச்சி வெல்லவாய ஐக்கிய நலன்புரி சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் இராணுவ வீரரின் தாயார், மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி மற்றும் வெல்லவாய பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ. நிஹால் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, இராணுவ வீரருக்கு நினைவுச் சின்னமும் பல பரிசுகளும் வழங்கப்பட்டன.

தங்காலை நகர சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

இதன்போது, பேருந்தில் இருந்த குழுவை மீட்க உதவிய இரண்டு பேரும் காயமடைந்த நிலையில், அவர்களில் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ. எம். வி. எம். பண்டாராவும் அடங்குவார். அவர் இப்போது ஓரளவு குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

எல்லா-வெல்லவாய பேருந்து விபத்தில் 16 பேரின் உயிரிழந்ததுடன் சுமார் 18 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.