செய்தி

இலங்கையின் பிரபல ராப் பாடகர் மீண்டும் கைது

சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ராப்  (Rep) பாடகர் மதுவா எனப்படும் மாதவ பிரசாத், மீண்டும் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மூன்று ஜெலிக்னைட் குச்சிகள், ஐந்து டெட்டனேட்டர்கள் மற்றும் 3.5 கிலோ அம்மோனியா நைட்ரேட் இருந்ததாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 25ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுதப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிடிபன, கலஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் சந்தேக நபர் வெடி பொருட்களை புதைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.   

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.