இலங்கை நெடுந்தீவு அருகே கடற்றொழிலில் ஈடுபட்ட காரைக்கால் கடற்றொழிலாளர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது ஒக்ரோபர் 1 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கைதானபோது இவர்களிடமிருந்து கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு கடற்படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபின்னர் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் இல்லத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

