செய்தி

அம்பாறை-செந்நெல் கிராமத்தில் நுழைந்த யானைகள்

நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக அம்பாறை சம்மாந்துறை செந்நெல் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள், வளவு, வாழைத்தோட்டங்கள் மட்டுமன்றி சில வீடுகளின் சுவர்களையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.

அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால் மக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டுவதில் சிரமங்களை எதிர்கொண்டதுடன் அதிகாலை 5 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.