செய்தி

ரணிலின் வழக்கு விசாரணை இன்று!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நீதிமன்ற அறைக்குள் சட்டத்தரணிகள் குழு மிக அதிகமாக கூடியுள்ளதாக தெரிவிக்கப்புடுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்றையதினம்(26) மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, கடந்த 22ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இந்த வழக்கில் சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் கூடுதல் மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ், நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைக்க உள்ளார்.

மேலும், சந்தேகநபரான ரணில் விக்ரமசிங்க சார்பில் சுமார் 300 பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு முன்னிலையாக உள்ளது.

அத்துடன், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் முன்னிலையாவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொலிஸாரால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றையதினம் பொது அமைதியைப் பேணுவதற்காக அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்துமாறு பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.