செய்தி

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(31) இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை – தும்பளையைச் சேர்ந்த குணரத்தினம் சிவகுமார் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கிளானை பகுதியில் தோட்டம் செய்கின்றார். இவர் சகோதரியின் வீட்டில் இருந்தே தோட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.

பன்றியிடம் இருந்து தனது மரவள்ளி தோட்டத்தை பாதுகாப்பதற்காக மின்சார வேலி அமைத்துள்ளார். 

இந்தநிலையில், மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டதாக நினைத்து வேலியில் கை வைத்தவேளை அவரை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.