செய்தி

மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பு இடையே போர் நடைபெற்று வருகிறது.

காசா நகரை கைப்பற்றும் நோக்கில், இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. 

இதன் காரணமாக அங்கு பெருமளவில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் மனிதநேய உதவிகளையும் உள்ளே அனுமதிக்காமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. 

தற்போது அமெரிக்கா ஆதரவு பெற்ற தொண்டு நிறுவனம் உதவி வழங்கி வரும் நிலையில்; உணவு பெற வரிசையில் காத்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது.

இந்நிலையில், இன்று தெற்கு காசாவில் உள்ள முக்கிய மருத்துவமனையான நாசர் மருத்துவமனை மீது இரு முறை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில், ராய்ட்டர்ஸ், அசோசியேட் பிரஸ், அல் ஜசீரா, மிடில் ஈஸ்ட் ஐ ஆகிய சர்வதேச செய்தி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பத்திரிகையாளர்களை குறிவைக்கவில்லை என்றும் மருத்துவமனை மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் போரில் இதுவரை 240 க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.