செய்தி

மட்டக்களப்பில் காணாமல்போன நபர் சடலமாக மீட்பு

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி இன்று மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான ஜயாத்துரை பத்மநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கூலி தொழிலை மேற்கொண்டு வரும் குறித்த நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர்

வழமைபோல வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவரை உறவினர்கள் தேடிவந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள தேவாலயத்துக்கு அருகில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.