செய்தி

பிளாஸ்டிக் பைகளுக்கு மேலதிக கட்டணம் விதிப்பு

 வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கான மேலதிக கட்டணங்களை விதிப்பதற்குத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார்.

சிறப்பு அங்காடிகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களில் அதிகளவில் பிளாஸ்டிக் பைகள் வழங்கப்படுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் கூறியுள்ளார்.

அத்துடன், சிறப்பு அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்காமல் அவற்றுக்கு விலை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மு.சு உடுவாவல தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.