செய்தி

பிரியதர்ஷனவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2014.12.26 முதல் 2015 ஜனவரி வரை வெள்ள நிவாரணத்திற்கான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக இன்று குற்றபத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்ட பின்னர், அதனை பரிசீலித்த  நீதிபதி அவர்களை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

மேலும், அவர்களின் கைரேகைகளை எடுக்கவும், முந்தைய குற்றப் பதிவுகளை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் முழு விசாரணைகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.