செய்தி

நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம்

யாழ்ப்பாணம் நல்லூர் கைலாசநாத பிள்ளையார் கோவில் மகோற்சபம் ஊர் நன்மை, நாட்டின் நன்மை கருதி எல்லோரும் ஒன்றுபட்டு நடாத்த வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கைலாசநாதர் பிள்ளையார் கோவில் மகாகும்பாபிஷேகம் விரைவில் நடைபெறவேண்டும் .

பழமையும் பெருமையும் மிக்க தமிழ்வேந்தர் காலத்து ஆலயமாக விழங்கும் நல்லூர் கைலாசநாதர் பிள்ளையார் கோவில் நிண்டகாலம் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் காலம் கடந்து கொண்டிருக்கிறது.  இந்த திருக்கோவிலின் கும்பாபிஷேசத்தை எல்லாரும் ஒற்றுமையாக விரைவில் நடாத்தி முடிக்கவேண்டும்.

நீண்டகாலம் கும்பாவிஷேகம் செய்யாது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு காத்திருப்பது சைவநெறிமுறைக்கு கூடாது சைவபாரம்பரியத்திற்கு அவை இடையூராக அமைந்துவிடும்.

ஊர் ஏழுச்சி நாட்டின் ஏழுச்சிக்கு திருக்கோவில்களில் சிறப்பாக பூசை வழிபாடுகள் நடைபெறவேண்டும்.

கடந்த பல வருடங்களாக கைலாசா நாதர் சிவன்கோவில் ,பிளைளையார் கோவில் வருடாந்த பெருந்திருவிழக்கள் நடைபெறுவது தடைப்பெற்றுள்ளது.

எனவே நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் மகோற்சவம் விரைவில் நடைபெறவேண்டும் ஊர் நன்மை,நாட்டின் நன்மை கருதி எல்லோரும் ஒன்றுபட்டு கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் .

மேலும் நித்திய நைநித்திய பூசைகள் நடைபெற சைவமக்கள் நன்மை கருதி வேண்டுகிறேன்” என்றும் கலாநிதி ஆறுதிருமுருகன் வேண்டுகொள்விடுத்துள்ளார் ..

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.