செய்தி

திருக்கோயில் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு

அம்பாறை – திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உதிரிப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸாருடன் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வம்மியடி ஆற்றுப் பகுதியில் இருக்கும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பிரதேசதம் கடந்த காலத்தில் தமிழின விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதுடன், அங்கு அவர்களின் முகாம் இருந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.