செய்தி

தமிழர் பகுதியொன்றில் விபத்தில் பலியான யுவதி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில்  டிப்பர் வாகன விபத்தில் உயிரிழந்த சந்திரசேகரம் யதுகிரியின் ஆத்மா சாந்திக்காகவும்,

எதிர்கால வீதி விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடனும், நேற்று இரவு 7 மணியளவில் விபத்து இடம்பெற்ற இடத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும், வாகன சாரதிகள் பாதுகாப்புடன், வீதி விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட வேண்டியது கடமை என வலியுறுத்தப்பட்டதோடு, ஒரே ஒரு கவனக்குறைவு, விலைமதிக்க முடியாத உயிர்கள் இழப்புக்கு காரணமாக மாறக்கூடும் எனவும் இந்த நிகழ்வில் எச்சரிக்கை கூறப்பட்டது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.