செய்தி

சில சட்டமூலங்களை நிறைவேற்ற அரசாங்கம் தீவிரம்

எதிர்வரும் வரவு செலவுத்திட்ட, சட்ட மூலத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்யும் சட்டமூலம் உள்ளிட்ட இன்னும் சில சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்வது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது.

அதன் பின்னரே வரவு செலவுத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிய வருகின்றது.

எதிர்வரும் ஒக்டோபர் 03ம் திகதி வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்ட மூலம் முதலாம் வாசிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.