செய்தி

கொழும்பு துறைமுகத்தில் அனர்த்தம்

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் ஒரு கொள்கலன் பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுக கொள்கலன் முற்றத்தில், ஒரு பிரைம் மூவர் வாகனத்தில் ஒரு கொள்கலனை ஏற்றிச் சென்றபோது, மற்றொரு கொள்கலனுடன் மோதி பிரைம் மூவர் வாகனத்தின் மீது விழுந்தது.

நேற்று நடந்த விபத்தில், பிரைம் மூவரின் ஓட்டுநர் பலத்த காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெடிகமவை சேர்ந்த 36 வயதுடையவராகும். கொள்கலனை ஏற்றிச் சென்ற இயந்திர இயக்குநரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.