செய்தி

கொழும்பில் ஒருவர் சுட்டுக் கொலை!

பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜிந்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, ​​திட்டமிட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட்ட அசங்கவின் முக்கிய உதவியாளரான ”c” வழங்கிய ஒப்பந்தத்தின்படி, 500,000 ரூபாய்க்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க நுகேகொட நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.