கொழும்பு புறக்கோட்டை அருகில் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சம்பவித்துள்ளது.

இதன்போது, காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அத்துடன், விபத்தின் போது, பேருந்து, தரிப்பிடத்தை நேரடியாக மோதியதால் அது முற்றிலுமாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

