செய்தி

கருப்பையை அகற்ற சென்ற தாய்க்கு மரணம்

தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக  மூன்று பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது.

காலி நீதவான் இந்த பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.காலியைச் சேர்ந்த,

46 வயதான செவ்வந்தி வயிற்று வலி காரணமாக ஹிம்புராலவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  கருப்பைக்கட்டியை குணப்படுத்த அவரது கருப்பையை அகற்ற வேண்டும் என்று ஒரு மகளிர் வைத்திய நிபுணர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சத்திரசிகிச்சையின் போது குறித்த தாயின் உடல்நிலை மிகவும் மோசமாகியதுடன் இதனால் அவர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டியில் உள்ள வைத்தியர்கள் முயற்சித்த போதும், அவரது மூளைக்கு இரத்தம் செல்வது தடைப்பட்டதால் அண்மையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.