செய்தி

கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை

 பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நாட்களில் கிளிநொச்சி நகரப் பகுதியில் கனரக வாகனக்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6.40 மணி தொடக்கம் 7.30 மணி வரையும், அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 மணி வரையும்

பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸாரின் மனிதநேயச் செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகரப் பகுதிகளுக்குள் பாடசாலை நாட்களில் அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளனர்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.