செய்தி

கனடாவுக்கு 15 மெட்ரிக் டன் இரும்பு ஏற்றுமதி

இலங்கையிலிருந்து 15,000 மெற்றிக் தொன் இரும்பு கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

MELWA குழுமம் முதன் முறையாக 9 மில்லியன் பெறுமதியான 15,000 மெட்ரிக் டன் இரும்புத் தாதுவை கனேடிய சந்தைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் 9 மில்லியன் டாலர் பெறுமதியான இரும்புத் தாதுவை கனேடிய சந்தைக்கு அனுப்புவதற்கான பெறுதல்களை பெற்றுள்ளது.

இந்த ஆண்டின் வருமானம் 110 மில்லியன் டொலர் என எதிர்பார்க்கப்படுகிறது. MELWA குழுமம் இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து நேற்று இரும்புத் தாது கப்பல் மூலம் அனுப்பப்பட்டதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.