செய்தி

கடத்தல்காரரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

வெளிநாட்டில் வசிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வனாத்தே, “பரை சுதா” என்ற போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்தே இவ்வாறு கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

தனது பிறந்தநாளுக்காக கொழும்பில் உள்ள ஒரு கலியாட்ட விடுதியில் ஏற்பாடு செய்த விருந்துக்கு, இருநூறுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அழைத்துள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இந்த விருந்துக்கு வந்துள்ளனர்.

பெண்களுக்கு முன்கூட்டியே புடவைகள் வழங்கப்பட்டதாகவும், ஆண்களுக்கும் உடைகள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விருந்து கடந்த வார இறுதியில் இரவு வேளையில் நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் மூலம் சம்பாதித்த கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க குறித்த சந்தேகநபரால் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் உள்ள வலையமைப்பை இப்போது புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பரை சுத்தா’ வெளிநாட்டிலிருந்து காணொளி அழைப்பு மூலம் நேரடியாக இந்த விருந்துக்கு இணைக்கப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.