செய்தி

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய உதவி

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா இராணுவ தளபாடம் ஒன்றை வழங்கியுள்ளது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க உதவியாக இது அமைந்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த உதவியின் கீழ் அமெரிக்க அரசாங்கம், பெறுமதிமிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இரண்டு வாகனங்களை இலங்கையின் விமானப்படைக்கு வழங்கியுள்ளது.

முற்றிலும் இலவசமாக இந்த வாகனங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.ஏற்கனவே, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 20 சதவீதமாக குறைத்துள்ள நிலையில்,

இந்த வாகன வழங்கலும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.