செய்தி

இந்தியாவில் கொன்று புதைக்கப்பட்ட 2800நாய்கள்

இந்தியாவின், கர்நாடகாவில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதுவரை 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளதாக ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் அனைத்து நாய்களையும் பிடித்து, அவற்றை 8 வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதியரசர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றத்தை நாடிய முதல் மாநிலமாக கர்நாடகம் இருக்கும் என ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா சட்ட சபையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்களுக்கும் விலங்குகள் மீது அக்கறை இருந்தாலும் நாய்க்கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, தான் சிக்மகளூர் நகராட்சி தலைவராக இருந்தபோது, நாய்களின் உணவில் விஷத்தை சேர்த்து சுமார் 2,800 நாய்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக சிறைக்கு செல்லவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.