செய்தி

61 வயதில் யாழ்ப்பாண நபர் படைத்த சாதனை!

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது 61வது வயதில் நேற்று (13)  மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார்.

உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.