மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் மாலே தலைநகரில் உள்ள சுல்தான் பூங்காவில்,
மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மரக்கன்றொன்றை நாட்டினார்.

நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மாலைதீவு சுற்றுலா அமைச்சர் தோரிக் இப்ராஹிம் மற்றும் இலங்கை சார்பாக, சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

