செய்தி

மருந்து பற்றாக்குறையை தீர்க்குமாறு பணிப்புரை

சில மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மருந்து விநியோக முறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி அணுகுவதை உறுதி செய்வதற்காக கொள்முதல் மற்றும் விநியோக முறையை முழுமையாக மாற்றியமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மருந்து கொள்முதலுக்கு திறைசேரி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்க நீண்டகால உத்திகளை உருவாக்குமாறும் அவர் வலியுறுத்தினார். 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.