தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது கல்முனை நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

