செய்தி

நல்லூரில் கழிவுகளை வீசுபவர்களை கண்டறிய CCTV

 நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நல்லூர் பிரதேச சபையால் கண்காணிப்பு கமராக்கள் ( cctv) நிறுவப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை கண்காணிக்கவே அவை பொருத்தப்பட்டுள்ளன.

கமரா பதிவுகளின் ஆதாரங்களின் பிரகாரம் கழிவுகளை வீசுபவர்களுக்கு பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் அறிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.