செய்தி

தமிழர்களின் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று

ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழத் தமிழர்கள் வாழ்வியலில் பின்னிப்பிணைந்த நமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு ஆகும் .

ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.

ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.

யாழ்ப்பாணம் மானிபாயை சேர்ந்த நவாலியூர் சோம சுந்தரப்புலவர் பாடிய ஆடிப்பிறப்பு பாடல் மிகவும் சிறப்பு வாய்வந்ததாகும், ஆடிப்பிறப்பின் மகிமையையும் அதன் கொண்டாட்ட்டத்தையும் விள்ளக்கும் வகையில் அமைந்துள்ளது அடிப்பிறப்பு பாடல்.

இந்நிலையில் வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.      

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.