செய்தி

இலங்கை வந்துள்ள நடிகர் ரவி மோகன்

 இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் இலங்கையின் வளமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்பட தயாரிப்பு மற்றும் இசை நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

“இந்த முயற்சிகள் இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்தவும், எமது வளமான கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தவும் உதவும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இதனூடாக , நாட்டின் அழகிய நிலப்பரப்புகள் மற்றும் வரலாற்று சின்னங்களை உலகளாவிய படைப்பு முயற்சிகளுக்கான பின்னணியாகப் பயன்படுத்த முடியும் எனவும் சுற்றுலா துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.