இந்தியாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்! கண்காணிப்பு பணிகள் தீவிரம்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பரவி வரும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ‘நிபா’ (Nipah) வைரஸ் பாதிப்பு காரணமாக, அண்டை நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளில் விமான நிலையக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் பராசத் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய ஐந்து சுகாதாரப் பணியாளர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு தாதியரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 110 பேர் […]

