தொழில்நுட்பம்

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் கடன் தவணைத் தவறல் காப்பீடு வரலாறு காணாத உயர்வு

  • October 15, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) முதலீடுகள் தொடர்பான அதிகரித்து வரும் கவலைகளும், கடன் அபாயங்களும் அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடன் திருப்பிச் செலுத்தத் தவறும் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முதலீட்டாளர்கள் கடன் காப்பீட்டுச் சேவைகளை அதிகளவில் நாடுகின்றனர். இதன் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கடன் பாதுகாப்புச் செலவுகள் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியால், தொழில்நுட்ப நிறுவனங்கள் தரவு மையங்கள், கணினிக் கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட சிப் தொழில்நுட்பங்கள் […]

தொழில்நுட்பம்

அமெரிக்காவில் டிக்டாக் விளம்பரங்களுக்கு Meta தடை

  • October 9, 2026
  • 0 Comments

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டா, டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு தனது தளங்களில் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா உட்பட ஏழு நாடுகளில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, கனடா, எகிப்து, இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பைட்டான்ஸ் நிறுவனத்தின் நேரடி விளம்பரங்கள் மட்டுமின்றி, டிக்டாக் மற்றும் அதன் பிற சேவைகளுக்குப் பயனர்களை அழைத்துச் செல்லும் மூன்றாம் தரப்பு விளம்பரங்களும் […]

தொழில்நுட்பம்

ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் கட்டமைப்பில் $155 மில்லியன் முதலீடு செய்யும் அமெரிக்கா

  • September 17, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், அமெரிக்காவின் International Development Finance Corporation (DFC), WIOCC நிறுவனத்தில் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வரை முதலீடு செய்ய உள்ளது. இது DFC மேற்கொள்ளும் மிகப்பெரிய equity முதலீடாகும். இந்த முதலீட்டின் மூலம் ஆப்பிரிக்காவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் இணைய இணைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தென்னாப்பிரிக்காவின் Johannesburg நகரை தலைமையிடமாகக் கொண்ட WIOCC, ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள், நிலத்தடி […]

தொழில்நுட்பம்

சூப்பர் கணினி உலகில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய சீனா

  • August 17, 2026
  • 0 Comments

உலகின் அதிவேக சூப்பர் கணினிகள் தொடர்பான சர்வதேச தரவரிசையில் சீனா மீண்டும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிவேக கணினி தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வரும் சீனா, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சூப்பர் கணினிகள் (Supercomputers) என்பது சாதாரண கணினிகளை விட பல மடங்கு வேகமாகவும், மிகப்பெரிய அளவிலான தரவுகளை மிகக் குறுகிய நேரத்தில் செயலாக்கும் திறனும் கொண்ட கணினிகளாகும். வானிலை முன்னறிவிப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி ஆராய்ச்சி, […]