லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ (DC) திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. வெளியான டிரெய்லரில் லோகேஷ் கனகராஜின் வித்தியாசமான தோற்றம், அதிரடி காட்சிகள் மற்றும் அனிருத் இசையின் பின்னணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. திரைப்படத்தில் வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் சமீபத்தில் வெளியீட்டு […]

