திடீரென பயணிகளுடன் காணாமல்போன இந்தோனேசிய விமானம்
இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல்போயுள்ளதாகவும், அருகிலுள்ள மலைப்பகுதியில் சிதறிக்கிடக்கும் விமானத்தின் இடிபாடுகளைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் ஊடக அறிக்கையான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் […]
