வயதானவர்கள் ஒரு வேளை மட்டும் சாப்பிடலாமா? இரவில் பழங்கள் மட்டும் சாப்பிடுவது சரியா
வயது அதிகரிக்கும்போது உணவுப் பழக்கத்திலும் பலர் மாற்றங்களைச் செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுவது அல்லது இரவு நேரத்தில் பழங்களை மட்டும் எடுத்துக்கொள்வது போன்ற உணவுமுறைகளை சிலர் பின்பற்றுகின்றனர். ஆனால் 70 வயதைக் கடந்தவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்படுத்தப்பட்ட உணவுமுறை உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறதா என்பது முக்கியமான கேள்வியாகும். வயதான காலத்தில் உடலின் தசை வலிமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இதற்காக போதுமான புரதம், […]

