பிரித்தானியாவில் உள்ள இலங்கை வைத்தியர்களுக்கு அவசர அழைப்பு
பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்கள் இலங்கைக்குத் திரும்புவது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார். அமைச்சர் ஜயதிஸ்ஸ, அண்மையில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இலங்கை உயர் ஸ்தானிகராலயம், பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மருத்துவர்களுடன் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் அப்போது தான் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததாகவும் சுகாதார அமைச்சர் கூறினார். “இந்தக் கலந்துரையாடலின் போது, பல்வேறு காரணங்களுக்காக நாட்டை […]





