தொழில்நுட்பம்

Anthropic IPO கூட்டத்தில் வருவாய் வளர்ச்சி மற்றும் AI பாதுகாப்பு குறித்த கவலைகள்

  • October 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா, அக்டோபர் 15, 2026: செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான Anthropic, பங்குச் சந்தையில் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொள்வதற்கான தயாரிப்புகளுக்கு மத்தியில், தனது வருவாயில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில், நிறுவனத்தின் நிதி வளர்ச்சி, இலாபம் ஈட்டும் திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Anthropic நிறுவனத்தின் வருவாய் 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் […]

தொழில்நுட்பம்

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் AI பாதுகாப்புக் குழுவை அமைத்து உலகளாவிய ஆட்சேர்ப்பைத் தொடங்கியது

  • October 15, 2026
  • 0 Comments

சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), செயற்கை நுண்ணறிவுப் (AI) பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகப் பிரத்யேகக் குழுவொன்றை அமைத்துள்ளதுடன், உலகளாவிய ஆட்சேர்ப்பையும் தொடங்கியுள்ளது. மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அவற்றின் பாதுகாப்பான பயன்பாட்டை உறுதிப்படுத்துவது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, AI அமைப்புகளில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கண்டறிதல், நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் புதிய குழு கவனம் செலுத்தும் என […]

தகவல்கள்

Anthropic நிறுவனத்தை கட்டுப்படுத்த புதிய ‘Founder LLC’ அமைப்பு

  • October 1, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு நிறுவனமான Anthropic, எதிர்காலத்தில் நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் சந்தை அழுத்தங்களால் மட்டும் பாதிக்கப்படாமல், பொதுநலன் மற்றும் நீண்டகால மனித நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் புதிய “Founder LLC” அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் அந்நிறுவனத்தின் IPO தொடர்பான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது. புதிய Founder LLC அமைப்பில் Anthropic நிறுவனத்தின் ஏழு இணை நிறுவனர்கள் இடம்பெற உள்ளனர். இதில் நிறுவனத்தின் CEO Dario Amodei, President […]

தொழில்நுட்பம்

OpenAI பாதுகாப்பு காரணங்களால் புதிய AI மாடல் வெளியீட்டை நிறுத்தியது

  • September 29, 2026
  • 0 Comments

OpenAI நிறுவனம் அக்டோபரில் வெளியிட திட்டமிட்டிருந்த GPT-6.1 Astra என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடலின் வெளியீட்டை நிறுத்தியுள்ளது. நிறுவனத்தின் உள்நிலை பாதுகாப்பு சோதனைகளில், இந்த மாடல் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு தரநிலைகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. GPT-6.1 Astra மாடல், பயனர்களின் நேரடி உதவி குறைவாகவே தேவைப்படும் வகையில் சிக்கலான பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் ChatGPT மற்றும் Codex உள்ளிட்ட […]

தொழில்நுட்பம்

AI பாதுகாப்பு அச்சத்தை நிராகரித்த Trump அமெரிக்காவிடம் கட்டுப்படுத்தும் கருவிகள் உள்ளன

  • September 15, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள கவலைகளை அமெரிக்க அதிபர் Donald Trump நிராகரித்துள்ளார். AI துறையை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமெரிக்க அரசிடம் ஏற்கனவே போதுமான சட்ட மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். AI தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் எதிர்கால தாக்கம் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் AI நிறுவனங்களின் தலைவர்கள் பல்வேறு எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக மேம்பட்ட AI மாடல்களால் […]

தொழில்நுட்பம்

டீனேஜர்களின் பாதுகாப்புக்கு புதிய ChatGPT அம்சங்கள்

  • August 20, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு டீனேஜர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஏற்ற வகையில் ChatGPT-ல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் டீனேஜர்களின் ChatGPT கணக்குடன் தங்களது கணக்கை இணைத்து, சில முக்கியமான அமைப்புகளை நிர்வகிக்க முடியும். இதன் மூலம் AI பயன்பாட்டை பாதுகாப்பானதாகவும், வயதுக்கு ஏற்றதாகவும் மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கும், டீனேஜரின் கணக்கும் இணைக்கப்பட்டால், ChatGPT-ல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக graphic violence, […]