பிரித்தானியாவில் முதல் வீடு வாங்க £5,000 முன்பணம் – புதிய அடமானக் கடன் வசதி
பிரித்தானியாவில் முதல் முறையாக வீடு வாங்க விரும்புபவர்கள், பெரிய தொகையை முன்பணமாகச் சேமிக்க முடியாமல் சிரமப்படுகிறார்களா? இத்தகைய வாங்குபவர்களுக்கு உதவும் வகையில், £5,000 முன்பணத்துடன் வீடு வாங்குவதற்கான அடமானக் கடன் வசதியை Lloyds Bank அறிமுகப்படுத்தியுள்ளது. Halifax வங்கியிலும் இந்த வசதி கிடைக்கிறது. 2026 மே 18 முதல் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், தகுதியுள்ள முதல் முறை வீடு வாங்குபவர்கள் சொத்தின் மதிப்பில் 98% வரை அடமானக் கடனாகப் பெறுவதற்கான வாய்ப்பாகும். […]
