இன்று இரவு மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு மின்னலுன் கூடிய பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அடுத்த 36 மணி நேரத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்
வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பக் குறியீடு அல்லது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான வானிலையால் சுகாதாரப் பிரிவினரால் அறிவுறுத்தப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.